MCQ ஊட்டம்

Q. “நாட்டுதும் யாம்  ஓா் பாட்டுடைச் செய்யுள்“ - என்று காப்பியம் படைத்தவா்

(A) சாத்தனார்
(B) இளங்கோவடிகள்
(C) புகழேந்தி
(D) கம்பா்
#tnpsc  

Q. ஸ்ரீபுராணம் என்னும் வழமொழிச் சைன நுாலில் உள்ள திவிட்டன் விசயன் கதையை விளக்கும் தமிழ்க் காப்பியம்

(A) யசோதர காவியம்
(B) வளையாபதி
(C) சூளாமணி
(D) நீலகேசி
#tnpsc  

Q. சீவக சிந்தாமணியின் உட்பிரிவு எந்தச் சொல்லால் அழைக்கப்படுகிறது?

(A) காதை
(B) படலம்
(C) காண்டம்
(D) இலம்பகம்
#tnpsc  

Q. கண்ணகி சினம் தணிந்து துயரமே வடிவாய் சேர நாட்டில் ஒரு குன்றின் மீது எத்தனை நாட்களிலிருந்து தேவருலகம் சென்றாள்?

(A) 13
(B) 12
(C) 14
(D) 16
#tnpsc  

Q. வட்டம் – பெயர்ச்சொல் வகைகளில் —————-

(A) பொருள் பெயா்
(B) சினைப்பெயா்
(C) தொழிற் பெயா்
(D) பண்புப்பெயா்
#tnpsc  

Q. கீழ்க்காணும் தொடரில் இடம் பெறாத பெயர்ச்சொல் வகை
மகழினி காலை ஒன்பது மணிக்குப் பேருந்தில் ஏறி பள்ளிக்குச் சென்றாள். அவள் அம்மா மதிய உணவுக்கு வற்றல் குழம்பு கொடுத்து அனுப்பினாள்.

(A) காலப்பெயா்
(B) தொழிற்பெயா்
(C) பண்புப்பெயா்
(D) பொருட்பெயா்
#tnpsc  

Q. கிறித்துவக் கம்பா் என அழைக்கப்படுபவர் யார்?

(A) எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை
(B) வீரமா முனிவா்
(C) பரிதிமாற் கலைஞர்
(D) தாயுமானவர்
#tnpsc  

Q. கீழ்க்கண்ட சொல்லின் வேர்ச்சொல்லை எழுதுக.

“பயின்றான்”

(A) பயின்ற
(B) பயின்றனன்
(C) பயில்கிறான்
(D) பயில்
#tnpsc  

Q. “படி“ என்ற வேர்ச்சொல்லுக்கு மிகச் சரியான வினையாலணையும் பெயரைத் தேர்க.

(A) படித்தார்
(B) படித்து முடித்தான்
(C) படிக்கின்றாள்
(D) படித்தவனை
#tnpsc  

Q. உண் – என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம்

(A) உண்ட
(B) உண்டு
(C) உண்டது
(D) உண்டல்
#tnpsc