ஆங்கிலம் MCQs

அனைத்து ஆங்கில கேள்விகளும் இங்கே

Q. பொருந்தா இணையைச் சுட்டுக.

(A) வெட்சிப்பூ – சிவப்பு
(B) நொச்சிப்பூ – பச்சை
(C) உழிஞைப்பூ – மஞ்சள்
(D) தும்பைப்பூ – வெள்ளை
#tnpsc  

Q. பெயருக்கேற்ற வினையை எழுது.

சோறு —————

(A) சாப்பிடு
(B) உண்
(C) தின்
(D) புசி
#tnpsc  

Q. வழுஉச் சொல்லை திருத்தி எழுது.

தலக்காணி ————-

(A) தலையணி
(B) தலையணை
(C) தலைகாணி
(D) தலையனை
#tnpsc  

Q. சந்திப்பிழை நீக்கி எழுதுக

(A) பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாப்பது நம் கடமை
(B) பண்பாட்டுக் கூறுகளைப் பேணி பாதுகாப்பது நம் கடமை
(C) பண்பாட்டு கூறுகளை பேணி பாதுகாப்பது நம் கடமை
(D) பண்பாட்டு கூறுகளை பேணி பாதுகாப்பது நம் கடமை
#tnpsc  

Q. சந்தி பிழையற்ற தொடா்

வள்ளை பாட்டியின் சிறப்பு கேற்ப முழவை முழங்குகின்றன

(A) வள்ளைப் பாட்டின் சிறப்புக் கேற்ப முழவை முழங்குகின்றது
(B) வள்ளை பாட்டின் சிறப்பு கேற்ப முழவை முழங்குகின்றது
(C) வள்ளைப் பாட்டின் சிறப்பு கேற்ப முழவை முழங்குகின்றன
(D) வள்ளைப் பாட்டின் சிறப்புக் கேற்ப முழவை முழங்குகின்றன
#tnpsc  

Q. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு.

“நாடும் மொழியும் நமதிரு கண்கள்“ என்கிறார் மகாகவி பாரதியார்

(A) நாடும் மொழியும் நமதிரு கண்களா?
(B) நாடும் மொழியும் நமதிரு கண்கள் என்று கூறியவர் யார்?
(C) நமதிரு கண்கள் நாடும் மொழியும் ஆகுமா?
(D) நாடும் மொழியும் நமதிரு கண்கள் என்று பாரதியார் ஏன் பாடவில்லை?
#tnpsc  

Q. “செங்கோல்” – இதன் எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக

(A) கொடுங்கோல்
(B) நெடுங்கோல்
(C) நல்ல போல்
(D) வளையாத கோல்
#tnpsc  

Q. ஒறுத்தார் – எதிர்ச்சொல் தருக

(A) பகைவா்
(B) தண்டித்தவா்
(C) நட்புக்கொண்டவர்
(D) விடை தெரியவில்லை
#tnpsc  

Q. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்

சொல்லும் – பொருளும்

(A) புரிசை – மதில்
(B) மாகால் – கடல்
(C) புழை – சாளரம்
(D) விடை தெரியவில்லை
#tnpsc  

Q. பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு

(A) செந்தாமரை
(B) கடுங்கதிர்
(C) இன்சொல்
(D) அலைகடல்
#tnpsc